சாகாத புத்தகம், இந்த மாதிரி ஒரு சாகாத புத்தகம் தனக்கு எத்தனை ஆயிரக்கணக்கான வாசகர்களைத் திரட்டித் கொள்ளுகிறதோ அந்த அளவுக்கு அது அடுத்து அடுத்து காலத்தால் நீளவும் செய்கிறது. அது ஆலவித்து, காலத்துக்கும் நின்று காலத்துக்கும் தந்துகொண்டு இருப்பது ! இப்போது ஒரு புத்தகத்தை நம்மால் இப்படிச் சொல்லமுடியுமா? பத்தாவது வயதிலேயே படித்து மறுநாளே மறந்துவிட்ட புத்தகங்கள்தான் நிறைய! இவைகளெல்லாம் வீணானவை அல்ல! இங்கேதான் எழுத்தாளர்கள் பலவீனப்பட்டுவிடக்கூடாது. ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு பாரதி தோன்றினான் என்றால், இடையில் வந்த கவிகள் எல்லாம் இதற்கு ஊட்டம் சாட்டமான எருவாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நான் பயப்படவேண்டியதில்லை. காலத்தில் நிற்க வேண்டாம் என்கிறபோது எருவாகிலிட்டுப் போகிறது. ஆனால் ஊட்டம் சாட்டமான எரு என்பது கவனமிருக்கட்டும்.
Be the first to rate this book.