காலம் வேகமாகச் சுழன்று கொண்டு இருக்கின்றது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாமும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. நமது சமுதாயத்தில் பொக்கிஷமாக உள்ள பக்தி இலக்கியங்களை விரிவாகப் படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. நம் இளைய தலைமுறையினருக்கு அதற்கான நேரமும் இல்லை. நம் பக்தி இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை அல்லவா? அதற்கான சிறுமுயற்சியாக கடல் நீரை ஒரு சிறு குடுவைக்குள் அடக்க முயல்வது போல 10,345 பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை அதன் உயரிய தத்துவங்கள் விடுபடாமல் சிறு நூல் வடிவில் எழுதி உள்ளேன்.
Be the first to rate this book.