கனவுகள் அழகானது.
கனவு சுகமானது.
எனினும் கனவு நிஜமானதல்ல.
கனவுக்கு வெளியேயானது உலகு.
கனவைக் கலைத்து நிஜத்தின்
கதவைத் திறந்தால் வாசலில்
பச்சை இரத்தத்தில் கோலம்.
அம்மா தாயே எனும் பிச்சைக் குரல்.
கந்தகப்புகையில் கருகிக்
கிடக்கிறது ரோஜா வனம்.
வேலிகளுக்குள் சிறையுண்டு
வெளிச்சமற்றுக் கிடக்கிறன மாடவிளக்குகள்.
கனவு வேண்டும் கால்களை
எட்டிப் போடுதற்கு கனவு
மெய்யப்பட வேண்டும் மாறாக
கனவுகள் போதை தருகின்றன.
மயக்கம் தீர்ந்தெழ விடுவதாயில்லை.
கனவுக்கு வெளியேயான உலகில்
கால் பதியும் போதுதான் நிஜத்தின்
காற்று வந்து முகத்தில் அறைகிறது..
Be the first to rate this book.