இன்றைக்கான நவீன வாழ்க்கை என்பதும் இன்றைய முதலாளிய உற்பத்தி அமைப்பில் கையளிக்கப்பட்ட ஒன்றுதான். இந்நவீன வாழ்வைப் புரிந்துகொள்ள இலக்கியம் குறிப்பாக சிறுகதைகள், சினிமாக்கள் முக்கிய நாவல்கள், பங்காற்றுகின்றன. குறிப்பாக தமிழின் நவீன வாழ்வை அறிய சிறுகதைகளும், நாவல் களும், சினிமாக்களுமே பெரும் பங்காற்றியுள்ளன. தொடர்ந்து இவை சமூக வாழ்வை மறுவடிவமைப்பு (refashioning) செய்துகொண்டே உள்ளன. இன்றைய சிறுகதைகளும் நாவல்களும் சினிமாக்களும் எப்படி வாழ்வை மறுவடிவமைப்பு செய்கின்ற என்பதை வாசிப்பது அவசியம். அத்தகைய வாசிப்பின் முதல்படி வாழ்க்கை என்பதை ஒரு வாசகப்பிரதியாக அணுக முற்படுவது. "வாழ்க்கையை ஒரு வாசகப் பிரதியாக புரிந்துகொள்ள முடியும்” என்று ஒருவரி இத்தொகுப்பின் கதை ஒன்றில் வருகிறது. அவ்வரியினூடாக இத்தொகுப்பை வாசிப்பது சுவராஸ்யமானது.
- ஜமாலன்
Be the first to rate this book.