கனவிலுங் கனவு - பாரதியார் சுயசரிதை உளப்பகுப்பாய்வு
'தன்வரலாற்று உளப்பகுப்பாய்வு' என்பது சுயசரிதையைக் சுதையாடாகக் கொண்டு ஒருவரின் நனவிலியைத் துப்பறிகின்ற அணுகுமுறையாகும். லக்கான் பார்வையில் வாழ்க்கையே ஒரு கனவு' என்பதால், இந்தத் தன்வரலாற்றைக் உணவுப் பகுப்பாய்வு போலச் செய்யலாம். இதற்கு இடம் கொடுக்கின்றவிதமாகப் பாரதியாரின் 'களவு' விளங்குகிறது. இது கவிதை வடிவிலான சுயசரிதை என்பதால் படிமங்கள் அடர்ந்த அழுத்தமான கனவாக உள்ளது. இந்த நூல், பாரதியாரின் காதல் தோல்வி ஏற்படுத்திய வலிக்குப் பின்னணியாக இருக்கின்ற நனவிலி வாழ்வை ஆராய்கிறது. மகாகவியின் இன்னொரு அகத்தை அகழ்வாய்வு செய்கிறது. தனவில் அவர் வல்லினமாக இருந்தாலும் நனவிலியில் மெல்லினமாக இருந்திருக்கிறார். அவரின் மெல்லிய காதலை ஃப்ராய்டிமத் தூரிகையால் இந்த நூல் வரைந்து காட்டுகிறது. 'காதல் போயின் சாதல்' என்பதன் பின்னணியில் அவரின் நிறைவேறாத 'கனவு' இருப்பதை அறிய முடிகிறது. இந்த ஆய்வின் மூலம். பொதுவில் நாம் காதலைப் புரிந்து கொள்ளலாம் கனவைத் தெளிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதரிடமும் இரட்டை வாழ்வு இருப்பதை அறிந்தேற்கமாம் மணநல வாழ்வுக்கான மனநல வழியைக் கண்டுகொள்ளலாம்; செல்லலாம்.
Be the first to rate this book.