கனல் அவள் ஊரிலேயே முதல் பெண் குழந்தையாக ஒரு பயணம் மேற்கொள்கிறாள். அப்பயணத்தில் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளிக்கிறாள்? இது கனல் போன்ற பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டும் குட்டி நாவல். பெண் குழந்தைகளின் வாழ்வியல் பயணத்தில் ஒரு பயணக்குறிப்பாக துணை நிற்கும்.
சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதைசொல்லி, சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. இப்போது கோவில்பட்டியில் வசிக்கிறார். 'பூஞ்சிட்டு' சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். 'கதை சொல்லு கதை கேளு' புலனக்குழு மூலமாகக் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்கிறார். இது இவரது ஐந்தாவது சிறார் நூல்.
Be the first to rate this book.