உங்களுக்குக் கணக்கு பிடிக்குமா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்! வாங்க, சுவையான கணக்குப் புதிர்களைப் போட்டு விளையாடலாம்!
உங்களுக்குக் கணக்கு பிடிக்காதா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதும்தான்! வாங்க, கணக்கு எவ்வளவு எளிமையானது, மகிழ்ச்சியானதுன்னு விளையாட்டாக் கத்துக்கலாம்!
கணக்கால் ஆனது நம் உலகம். வீட்டுக்குள்ளும் சாலையிலும் பேருந்திலும் திரையரங்கிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பலப்பல கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறோம், அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம். சின்னஞ்சிறுவர்களில் தொடங்கிப் பெரிய அலுவலர்கள், தொழிலதிபர்கள், நிர்வாகிகள், ஆட்சியாளர்கள்வரை எல்லாரும் எண்களை ஆராய்ந்து, கணக்குகளைப் போட்டுப்பார்த்துதான் வெற்றியடைகிறார்கள்.
முதன்மையான வாழ்க்கைத் திறன்களில் ஒன்றான கணக்கின்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் சுவையான புதிர்த் தொகுப்பு இது. இனிமையான கதைகளைப் படிக்கலாம், அழகழகான ஓவியங்களைப் பார்க்கலாம், புதிர்களைத் தீர்த்து மகிழலாம்… சீக்கிரம் உள்ள வாங்க!
Be the first to rate this book.