ஏனோ
செடியில் யாருக்காகவோ
பூத்திருக்கின்றது பூ
பூவில் யாருக்காகவோ ஊறுகிறது தேன்
மரத்தில் யாருக்காகவோ பழுக்கிறது கனி
காட்டில் யாருக்காகவோ குவியும் வளம்
நிலத்தில் யாருக்காகவோ பொழிகின்றது மழை
பூமியில் யாருக்காகவோ சுடர்கின்றது சூரியன்
இரவில் யாருக்காகவோ தனித்திருக்கிறது நிலா
மாலையில் யாருக்காகவோ வீசுகின்றது தென்றல்
எங்கோ பறந்து செல்கிறது புறா
எதற்காகவோ குரைக்கிறது நாய்
ஏனோ சுழல்கிறது பூமி.
Be the first to rate this book.