இருபத்தேழு வயதில் இலக்கிய உலகின் இமயத்தை எட்டிப்பிடிக்க முயல்கின்ற சாதனை இளஞ்சுடரை வியந்து வாழத்துகிறேன். கவிஞர். ஆய்வாளர், சிறுகதை எழுத்தாளர், இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் என்று பன்முகம் கொண்ட பண்பாளர், உமையவரை உளமாரப் பாராட்டுகிறேன். விடிவெள்ளியாக உமையவன் தோன்றி இருக்கிறார். நற்தொண்டு ஆற்றும் உமையவன் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு. இந்த இளம் வயதில் ஒரு பழைய இலக்கியத்திற்கு உமையவன் உரை எழுதியிருப்பது அவருடைய பன்னூல் பயிற்சியை வெளிப்படுத்துகிறது. இந்த நூலுக்கு எழுதியுள்ள உரை மிகமிக அழகு எளிய தமிழில் எழுதியுள்ளது சிறப்பு. மறைந்து கிடந்த ஏர் எழுபது நூலுக்கு உரை எழுதி அந்நூலை உலகோர் அறியுமாறு செய்துள்ள உமையவன் வாழ்க! வாழ்க!
செந்தமிழறிஞர் சிலம்பெணி சு. செல்லப்பன்
கவிஞர் உமையவன். விவசாய குடியைச் சேர்ந்தவர். வேளான்மையின் வீரியம் உணர்ந்தவர். அது பற்றி நிறையப் பேசியும் எழுதியும் வருபவர். அதனாலேயே தம்மை 'உழவுக் கவிஞர்' என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுகிறவர். இந்த நூலுக்கு ஒரு கூடுதல் தகுதி உரையாசிரியர் 'உழவர்' என்பது, அதனால் தொழிலின் நுட்பங்கள் உணர்ந்து புதிய கருத்துக்களையும் சேர்த்துள்ளார். உழவுத்துறைக் கலைச் சொற்களுக்கான உரிய பொருளும் அவரால் மிகச் சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. கவிஞரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஒவியக்கவிஞர் மலர்மகன்
இளம் எழுத்தாளர் ப. ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி, கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது, ராவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu-2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாதெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர், கலைஞர், மக்கள், பொதிகை, ஜிதமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்திய வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.