நவீனத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் அதன் வகைமைகளை உருவாக்கிய முன்னோடிகள் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, ராஜமையர், நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை ஆகியோர். தமிழ் நாவலின் இருண்ட காலம் (1910-40) என்றழைக்கப்படும் புற்றீசல் போன்ற நாவல் பெருக்கக் காலகட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைஸ்வாமி அய்யங்கார் போன்ற பிரபலமான துப்பறியும் மாமக் கதை மன்னர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் நடேச சாஸ்திரியும் பொன்னுசாமி பிள்ளையும் எனலாம்.
பொன்னுசாமி பிள்னை எழுதிய கமலாட்சி, விஜயசுந்தரம், சிவஞானம், ஞானசம்பந்தம், ஞானாம்பிகை ஆகிய பிரபல நாவல்கள் ஜனரஞ் கத்தன்மை, பொழுதுபோக்கு, மாமம், கொலை கொள்ளை, திடுக்கிடும். சம்பவம், திடீர்த் திருப்பம் போன்ற சுவாரசியமான கதைக்கூறுகளுடன் சைவ சித்தாந்தத்தின் மேன்மை பற்றிய பிரச்சாரத்தையும் காலம், இடம், பண்பாடு போன்ற நாவல் கலையின் அழகியல் பிரக்ஞையையும் கொண்டிருக்கும்.
தி.ம. பொன்னுசாமி பிள்ளையின் பிரதிநிதித்துவம் கொண்ட படைப்பு இந்த கமலாட்சி சரித்திரம் (1903) நாவல், க.நா.சுப்ரமணியம் தம் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்ற விமர்சன நூலில், பிற்காலத் தமிழ் நாவல்களின் ஐந்து வகைப் போக்குகளைத் தீர்மானித்த ஐந்தாவது நாவலாக கமலாட்சி நாவலையே முன்னிலைப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.