கவிதையெழுத்தில் ஐம்பது ஆண்டு களைக் கடந்திருக்கும் சுகுமாரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இந்த நூல். 2022-2026 வரையான ஐந்து ஆண்டுகளில் எழுதிய அறுபத்து நான்கு கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு தொகுப்பிலும் தனது கவிதைகள் மாறி வருவதாக வும் அதற்கு இணையாகக் கவிதை பற்றிய கருத்துக்களும் மாற்றமடைவதாகவும் நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். கவிஞரே தன்னைத் தாண்டிச் செல்வதாக வும் கவிதைகள் தாமாகவே தம்மைக் கடந்து செல்வதாகவும் உரிமை பாராட்டுகிறார். அது சரிதானா என்று மதிப்பிடும் பணியை வாசகர்களிடம் கோருகிறது இந்தத் தொகுப்பு.
Be the first to rate this book.