பள்ளிப்பாட நூல்களின் கருத்தியல் அம்சங்களின் மீது தீவிர கவனம் செலுத்தும் யாருக்கும் அவற்றில் உள்ள குறைபாடுகள் அதிச்சி அளிக்கும். வரலாற்று உண்மைகள், அறிவியல் கருதுகோள்கள் மொழிப்பொருண்மைகள் போன்ற பல்வேறு கோணங்களில் பாடநூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள பாடங்களை நுண்மையாக ஆய்வு செய்து தான் கண்டறிந்த உண்மைகளை பட்டறிவின் அடித்தளத்தின் மீது காலூன்றி நின்று ஆணித்தரமாக முன்வைக்கிறார் சிவகுருநாதன் பள்ளிக்கல்விப்புலம் சார்ந்து பணியாற்றும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
மு.சிவகுருநாதன் (1973) திருவாரூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். கல்விக் குழப்பங்கள் (2017), கல்வி அறம் (2018). ஏ.ஜி.கே. எனும் போராளி (தொகுப்பு 2020), கல்வி அபத்தங்கள் (2021), பாடநூல்களில் வெறுப்பு அரசியல் (2021) போன்ற நூல்கள் இதுவரையில் வெளியாகியுள்ளன. முதலிரண்டு நூல்களை பாரதி புத்தகாலயத்தின் 'புக்ஸ் ஃபார் சில்ரனு'ம் அடுத்த இரண்டு நூல்களை 'பன்மை'யும் வெளியிட்டன. பாடநூல்களில் வெறுப்பு அரசியல் என்ற குறுநூலை 'இலக்கியச் சோலை' வெளியிட்டது.
Be the first to rate this book.