எழுத்தாளர் விக்டர் பிரின்ஸ், 2023 இல் எழுதி 'சால்ட்' பதிப்பகம் வெளியிட்ட கள்ளிவெட்டிச்சாரி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளில் ஒன்றான 'கள்ளிவெட்டிச்சாரி' யை திரைக்கதையாக எழுதியுள்ளார்.
குமரி மேற்கில் அருமனை எனும் ஊரில் பென்னி எனும் இளைஞன் தான்தோற்றியாக சில குற்றவழக்குகளுடன் திரிகிறான். கொரானா காலகட்டத்தில் அவனது தாய் லீலாம்மா நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள். முன்னாள் சாராய வியாபாரியான தாய்க்கு கல்லறை தோட்டத்தில் இடம் ஒதுக்குவதில் சர்ச் நிர்வாகம் முரண்படுகிறது. பென்னியின் பிறப்பு குறித்த கேலிக்கு காரணமான லீலாம்மாவின் முன்னாள் காதலர் அருமைநாயகம் என்பவரின் மகன்கள் அந்த தேவாலயத்தின் முக்கியஸ்தர்களாக இருப்பதால் பிரச்சனை முற்றுகிறது. தனது தாயின் இறுதி விருப்பமான 'அருமைநாயகத்தின் கல்லறை அருகில் அடக்குதல்' மனதில் ஏற்றி அவரது கல்லறைக்கு அருகில் புதைக்க பென்னி போராடுகிறான். அதிகாரம் அரசியல் அனைத்துடன் தனிமரமாக்கப்பட்ட பென்னி தனது தாயின் சடலத்துடன் 48 மணிநேரம் போராடுகிறான். 48 மணிநேரத்தில் அவனுக்கு சாதகமாக சூழலில் விடயங்கள் திரும்பும் போதெல்லாம், ஏதோ புது சிக்கல்கள் உருவாகிறது என்பதை திரைக்கதை தத்துருபமாக பின்னி கோர்த்துள்ளது. வானளாவ உயர்ந்து நிற்கும் எதிர்ப்புக்களை மீறி தனது தாயை அருமைநாயகத்தின் அருகில் மரியாதையாக நல்லடக்கம் செய்தானா !! என்பதே திரைக்கதைக்கான கிளைமாக்ஸ்...
Be the first to rate this book.