ஈழப்போராட்டத்தின் இறுதி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நவீன இந்தியாவின் மாபெரும் சத்தியாக்கிரகம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு, பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரணதண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்ற தொடர்ச்சியானப் போராட்டங்கள். பசுமை வேட்டை, இந்துத்துவர்களின் வெறுப்பு அரசியல்-இப்படியாக 2010 ஆம் ஆண்டின் தொடக்கங்களில் தமிழ்நாட்டில் அதிர்வுகளை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் குறித்து இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆழமான பார்வையை முன்வைக்கின்றன.
பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்படும் இந்நேரத்தில் கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா செழித்து வளர்ந்திருக்கிறது. திருப்பரங்குன்றத்தை மற்றுமொரு அயோத்தியாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. மாவோயிஸ்ட்களின் மீது இறுதித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் உள்ளிட்ட தீண்டாமை வன்கொடுமைகள் அப்படியே தொடர்கின்றன. வரலாற்றை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது நாம் கடந்துவந்த பாதைகள் ஒளிர்கின்றன. எதிர்காலப் பாதைகளை சரியாக வகுத்துக்கொள்ள அவை நமக்கு மிகவும் உதவுகின்றன. இந்நூலின் மீள்பதிப்பின் தேவையும் அவ்வாறே உணரப்படுகிறது.
Be the first to rate this book.