கோவில் யானைக்கு கரும்பை தந்து விட்டீர்கள்! எப்போது காட்டை திருப்பி தருவீர்கள் என்று கற்று நூறு கவிதைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலுரைக்க முடியாமல் விழிபிதுங்க வைக்கிறது இந்நூல்.
-கோவை சதாசிவம்
யானை என்றதுமே அதை உணர்வு ரீதியாக, வலிமை மிக்க பேருயிரியாக காட்சிப்படுத்திய கவிதைகள் ஏராளமாக காணக்கிடைக்கும் சூழலில் லீலாவின் கவிதைகள், அந்த மரபைத் தலைகீழாக மாற்றி, நவீன மனிதனின் வன்முறையும் இரட்டைத் தர்மங்களையும் வெளிச்சமிடும் சாட்சியாக யானையை நிறுத்துகின்றன. யானையை மையமாகக் கொண்டு, மனித மையவாதத்தைக் (Anthropocentrism) கடுமையாக விமர்சிக்கும் ஒரு சூழலியல் ஆவணமாக செயல்படுகின்றன. அழிந்து வரும் பசுமைக்கும், சிறைப்பட்டுக் கிடக்கும் உயிரினங்களுக்கும் ஆதரவாக எழுப்பப்பட்ட ஒரு தார்மீகக் குரலாய் இத்தொகுப்பு யானையை ஓர் உயிரினமாகப் பார்க்காமல், காட்டின் இயக்கமாக (Ecological Engine) முன்னிறுத்துகிறது.
-கவிஞர் மதுரா
Be the first to rate this book.