பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று, அந்தக் கதையை நம்பித்தான் கூறுகிறீர்? தேவரும், மூவரும் தேன் பூசிய நஞ்சு! விண், வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஒரு சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி! நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த வினை மெல்ல மெல்லப் பரவி வருகிறது. அதினின்று நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாமல் பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.