சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில் அல்லது ஓரிரு அமர்வுகளில் படித்து முடிக்கக்கூடிய, ஒரு மையக் கரு அல்லது குறிப்பிட்ட நிகழ்வைச் சுற்றிப் பின்னப்பட்ட புனைவு உரைநடை இலக்கிய வடிவமாகும். வா.வே.சு.ஐயரில் தொடங்கிய தமிழில் சிறுகதை வரலாறு, இன்று அளவிட முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகி உள்ளது. வார, மாத இதழ்களில் சிறுகதைகளைப் படித்த காலம் போய், சிறுகதைகளின் தொகுப்புகள் பலவும் இன்று உருவாகி வருகின்றன. அந்த வகையில் நாம் அன்றாடம் காணக்கூடிய பல்வேறு மனிதர்களையும், நாம் கேட்கும் பல்வேறு செய்திகளையும் கண்முன் காட்டக்கூடிய பல சிறுகதைகளின் தொகுப்பு நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
கல்லூரியில் தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுப்பழி நீங்கு வதற்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் மாணவி, தன் கணவன் வேறொரு பெண்ணோடு உறவு கொண்டுள்ளமை அறிந்து, தனக்கு நீதி கிடைக்காது என்ற நிலையில் கிணற்றில் விழுந்து இறந்து போகும் பெண், புற்றுநோயால் உயிரை விடும் தாய், தம்பியைத் தாயாக வளர்க்கும் அக்கா - தம்பியோடே இறந்து போகும் பாசம், காதலித்து மணந்து கொண்டாலும் வரதட்சணை கேட்கும் கணவனை விட்டுத் தாயோடு வாழத் துவங்கும் பெண் எனப் பல்வேறு மனிதர்கள், அவர்கள் இத் தொகுப்பில் சந்திக்கும் சிக்கல்கள் என அனைத்தும் சிறுகதையாக்கப்பட்டுள்ளன. நமது வாழ்வியலையே இச் சிறுகதைகள் பிரதிபலிப்பதை நாம் காண முடிகிறது.
Be the first to rate this book.