ஓயாத அலை நாக்கின் நடுவே போராளிப்பேரலையாய், பேனாசிற்பமாக கலைஞர் எனும் சட்டப் போராட்ட சமுத்திரம், உயர்ந்த அடையாளமாய் ஒலிக்க இருக்கிறது வரலாறாய்.! சட்டப் போராட்டங்களின் சங்கிலியாக கோர்க்கப்பட்ட வாழ்க்கையாகவே அமைந்துவிட்டது கலைஞரின் நெருப்பு வாழ்வு.
அரை நூற்றாண்டு காலஅரசியலின் மையப் புள்ளி அவர். போராடாத நிலை வந்தால் சோர்வடைவார் கருணாநிதி எனும் வாழ்நாள் போராளி...!
சமூக நீதி, மாநில உரிமைகளுக்காக திமுகவின் திருக்குவளை தீப்பந்தம் மு. கருணாநிதியின் நெடிய வாழ்நாள் சட்டப்போராட்டங்கள் தமிழகத்தின் அரை நூற்றாண்டு வரலாறாக மாறிவிட்டது...
தமிழகத்தின் அதிரடி திருப்புமுனை சரித்திரங்கள், திருக்குவளை தீப்பந்தம் வழியே தான் வரலாறு வழிகாட்டி பயணிக்கிறது...!
அண்ணா சமாதியில் தான் கலைஞரின் துயில் என்பது என்றோ முடிவான ஒன்று..
கல்வி கற்க அனுமதிக்காவிடில் பள்ளியின் கமலாய குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் துவங்கிய கருணாநிதியின் மூர்க்க ப்போராட்டம், தனக்கான கல்லறைக்கு கடைசி யுத்தம் நடத்தி சட்டப்போராட்டத்தில் வென்றெடுக்கும் வரையிலும், கலைஞரின் ஆத்ம சங்க நாதம் ஒங்கி ஒழித்தது அகிலம் அறிந்ததே...!
Be the first to rate this book.