முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்தவர்; வசனகர்த்தா பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி முதலமைச்சர் எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர் நாவல் சிறுகதை கவிதை கட்டுரை கடிதம் நாடகம் திரைவசனம் எனப் பல்வேறு இலக்கிய வகையில் சுமார் ஒரு லட்சம் பக்க அளவிற்கு எழுதியவர். சமநிலையும் சமூக நீதியும் சமூகத்தில் மலர வேண்டுமெனத் தன் எழுத்துப் பயணத்தை வரையறுத்துக் கொண்டவர். இவர்தம் நூற்றாண்டை முன்னிட்டு சாகித்திய அகாதெமிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது. இந்த நூல், கலைஞரின் ஒட்டுமொத்தப் படைப்புலகில் காணலாகும் இலக்கிய ஆளுமையை வெளிக்கொணர்ந்துள்ளது; எதிர்கால இலக்கிய உலகிற்கான கை விளக்காகவும் திகழ்கிறது.
இந்த நூலைப் பதிப்பிக்கும் இரா. அறவேந்தன் அவர்கள் அசோகமித்திரன் சிறுகதைகள், பூரணிகவிதைகள், அறிஞர் அண்ணா நாவல்கள் ஆகியவற்றின் இலக்கியக் கொள்கையை வெளிக்கொணர்ந்தவர்; தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு இலக்கணங்களை ஒப்பிட்டுப் புதிய கருத்தாக்கங்களை உருவாக்கியவர்; சங்க இலக்கிய உரை வேறுபாடுகளை ஆராய்தலிலும் பதிப்பு வரலாற்றை எழுதுதலிலும் ஈடுபாடுடையவர். தற்போது, தாய்க்கோழி: பெரியார் இலக்கியம் எனும் தொகுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகச் சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறையின் தலைவராகவும் சாகித்திய அகாதெமித் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.
Be the first to rate this book.