ஃபிரான்சின் பிரம்மாண்டமான வெர்சாய் அரண்மனை, அதன் உயிர்ப்பான ஒலியங்கள் நம்மை நகர விடவில்லை. லூவர் அருங்காட்சியகத்தில் மௌனமாய், மர்மமாய், பார்க்கும் கண்களை பதட்டமாக்கும் மோனோலிசா.
மக்களை சிரிக்கவைத்து, யோசிக்கவைத்து, ஆதிக்க சக்தியை எதிர்த்து, உழைக்கும் மக்கள். பக்கம் நின்ற சாப்ளின், வாழ்நாள் முழுக்க இசை என்ற ஒற்றை வார்த்தையில் வாழ்ந்து, சாதித்து, இடி மின்னல் அதீத மழை என்றொரு நாளில் மௌனமாய் செத்துப்போன பீத்தோவன், தன் ஒவியங்கள் இப்போது எப்படியெல்லாம் ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறதென்று தெரியாமலேயே, அதற்காக ஏங்கி இறந்த வின்சென்ட் வான்கா, உலகின் மிகப் பெரிய விருதான நோபல் விருதின் பெயருக்கு சொந்தக்காரரான ஆல்ஃப்ரட் நோபல் என எல்லாவற்றையும் ரசித்த ஐரோப்பிய பயணம் மறக்க முடியாதது.
Be the first to rate this book.