இந்த இருளில் ஒரு குரல்
முன்னால் நிற்கும்
ஒற்றைக் காகம்
நெடிது வளர்ந்த மரத்திலிருந்து தான் கேட்டது
தீனமாக அந்தரித்துக் கரைந்தது
வழி தெரியாமல் தவிப்பதாக
பசியில் கத்துவதாக
எல்லா விதமும் தொனிக்க
சுற்றுப் புறத்தின் அமைதியில்
பயங்கரச் சோகமாக அச்சத்தம்
யன்னல் கண்ணாடியை ஊடுருவி
நிம்மதியிழக்கச் செய்கிறது
என்ன அவலமோ?
கேள்வியிலிருந்து
ஒரு கைப்பிடியை
யன்னல் விளிம்பில் வைத்தேன்
தத்தளித்த இரவு
அமைதியாக அடங்கியது.
Be the first to rate this book.