வெயில் தின்று கரிந்து கிடக்கும் கரிசலின் வெக்கையை, வெள்ளாமைக் கனவுகளை அலகில் கொத்தியபடி, மனதை மீட்க வழியறியாது பெருநிலத்தை அளக்கும் மாயப் பறவையின் சொற்கள் இவை. பால்யத்தின் கனவுகளைச் சுமந்து திரியும் அப்பறவை, ஆதிநிலத்திற்கும் சொந்த நிழல்களைக் காணா நிகழ்பொழுதின் நிலத்திற்குமாக அலைந்தலைந்து வாழ்வின் தாகம் தணிக்க எத்தனிக்கிறது. கால அகராதியில் நவீனத்தின் சொற்கள் புதுப் பொருள் கொள்ள, தும்பைப் பூ அழிந்துபட்ட நிலத்தில் புத்தனும் அகதியானது, யுகத்தின் பெருங்கணக்கெனச் சொல்லும் சத்தீஸ்வரனின் சொற்கள், உடைந்து பெருகக் காத்திருக்கும் நினைவுச்சுனையில் பிறந்தவை. அவரின் மனக்குளம் வெள்ளரிப்பூவும், பீர்க்கம்பூவும், மிதுக்கம்பூவும் விரிந்து சிரிக்கும் நிலத்தில் நிரம்பித் ததும்புகிறது.
- கவிதா நல்லதம்பி
Be the first to rate this book.