'கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெரிமனை வந்தோய் கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற வாழியே முருகே!' - (நற்றிணை: 340)என்றொரு பாடல் சங்க இலக்கியத்தில் உண்டு.
மலைக்கடவுள் முருகனைப் பார்த்து, மலைப் பெண்ணொருத்தி பாடுவதாக வரும் இப்பாடல், 'நீ பெரிய கடவுளானால் அது உன் மட்டுக்கும்தான். இந்தப் பிரச்சினையில் தலையிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று அம்மலைப் பெண் முருகனிடம் கேட்பதாக பாடல் செல்கிறது. சுடவுளையே கேள்விக்கு உள்ளாக்கிய மொழியாகத் தமிழ் இங்கே வடிவம் கொள்கிறது. தமிழ் தன்னியல்பாகவே கேள்வி மொழியாக காலந்தோறும் இருந்து வந்து ள்ளதைப் பார்க்கலாம்.
இதுவே பாரதியின் பாடல்களில் விடுதலையின் மொழி. பெரியாரின் சொற்களில் அது பகுத்தறிவின் மொழி, தோழர் ஜீவானந்தம் காட்டும் கம்பனின் பாடல்களில் அது தோழமை மொழி. (தோழமை என்றவர் சொல்லிய சொல் ஓர் சொல் அன்றோ - கம்பன்) என்று தோழமை மொழியாகிச் சுடர்ந்தது. சைவ, வைணவ, கிறிஸ்துவ, இஸ்லாமிய இலக்கியங்களில் அது பக்தி மொழியாகவும் நின்றிருக்கிறது. இந்த தமிழ்தான் காலத்தால் முந்தியதும் காலத்தை செறித்து வருவதுமாகும்.
Be the first to rate this book.