தமிழகத்தின் கடலோரக் கிராமங்களில் வாழும் மீனவர்கள் குறித்து எழுதப்பட்டிருப்பது போலத் தோன்றும் இக்கட்டுரைகள் அதற்கும் அப்பால் விரிந்து நாட்டின் கடல்வளம், புரதஉணவு, பாதுகாப்பு, இறையாண்மை, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, கொள்கை வடிவமைப்பில் உள்ள மேட்டிமைத்தனம் போன்றவற்றைப் பற்றி ஒரு கடற்குடியின் கண்ணோட்டத்தில் அறிவுச்சினத்துடன் விளக்கிப் பேசுகின்றன.
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.