இயற்கையில் நிலவும் சமத்துவத்தை மனித சமூகத்திலும் நிலைநாட்ட வேண்டும் என்கிற பொதுவுடைமைப் போராளியின் கனவே அப்பாவின் பாடல்கள். மனிதர்களிடம் காட்டிய அதே பேரன்பைப் பறவைகளிடமும் செடிகொடிகளிடமும் பிரதிபலிக்கும் உயிர்களின் தோழனாய்த் திகழ்ந்தார்.
மண் சார்ந்த ஆளுமையையும் செம்பருத்தியையும் பாடுபொருளாக்கும்போது அங்கு அவரது பொதுவுடைமைச் சிந்தனையும் மண் சார்ந்த அரசியலும் சமரசமின்றி வெளிப்படுகின்றன.
இயற்கை என்பது தனிநபர் சொத்தல்ல, அது அனைவருக்கும் பொதுவான வாழ்வாதாரம் என்ற கொள்கையை முன்வைப்பதன் மூலம் சூழலியலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்ற,
அழிவின் விளிம்பில் இருக்கும் நம் நாட்டு மருத்துவத்தையும் இயற்கை வளங்களையும் மீட்டெடுக்கத் தூண்டும் ஒரு கருத்தியல் ஆயுதமாகவே அவரின் பாடல்கள் திகழ்கின்றன.
அவரின் எளிய குரலில் இருந்த நேர்மையும், லட்சிய உறுதியும் உழைக்கும் மக்களைப் பெரிதும் ஈர்த்தன. யாருக்காக எழுதினாரோ அந்த உழைக்கும் மக்களே அவரது பாடல்களை இதயங்களில் ஏந்திக் கொண்டனர்.
Be the first to rate this book.