கடமையான வணக்கங்கள் விசயத்தில்கூட கவனமில்லாமல் வாழ்கின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நூல் உபரியான வணக்கங்களின் சிறப்புகளையும் செயல்முறைகளையும் பல்வேறு தலைப்புகளில் விவரிப்பதை வாசிக்கும்போது, ஒருபுறம் அந்த உபரி வணக்கங்களின்மீது நமக்கு ஆசை பிறப்பதோடு, மறுபுறம் எத்தனை கடமைகளில் நாம் தவறுசெய்து வருகிறோம் என்பதையும் நினைவூட்டுகின்றது. கடமைகளை அலட்சியம் செய்வது பெரும்பாவத்தில் தள்ளக்கூடியது; உபரிகளை அலட்சியம் செய்வது ஒருகட்டத்தில் கடமைகளையும் அலட்சியம் செய்கின்ற பெரும்பாவத்திற்கு இழுத்துச் செல்லக்கூடியது. இந்த உணர்வுதான் இந்நூலை வாசிக்கும்போது ஏற்படுகின்றது. ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஜாருல்லாஹ்வின் இந்த நூல் நமக்குள் கடமை மற்றும் உபரி வணக்கங்கள் இரண்டின் பக்கமும் கவனத்தைத் திருப்புகின்றன.
Be the first to rate this book.