நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அடங்கிவிடுவதில்லை. இது புதுக்குரல். தன் குரலைத் தானே கேட்டுப் பயின்று கொள்ளும் புதுக்குரல். அதன் வீச்சு இன்னும் முதிர்ந்து பெருகி எங்கும் ஒலிக்கும் காலம் விரைவில் வரும் என்பதே இப்புத்தகம் எனக்கு உணர்த்துகின்ற செய்தி.
சிறில் அலெக்ஸ்,
எழுத்தாளர்.
Be the first to rate this book.