குழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன்.
பெரியவர்கள் புழங்கும் டீ கடைகளில் ‘இங்கே அரசியல் பேசாதே’ என வாசகம் எழுதியிருக்கும்போது சரிதா ஜோ அவர்கள் தனது கதை மூலம் சிறார்களுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருப்பதும் அதுவும் சிறார் மனதை அழுத்தாமல் பார்த்துக் கொண்டதும் பாராட்டுக்குரியது. இதுவரை மனித சமூகம் நடமாடும் பொது வெளியையும் காடுகளையும் தனது கதைகளின் கருவாகக் கொண்டெழுதிய எழுத்தாளர் முதன் முறையாக கடலுக்குள் பயணித்திருப்பது எளிதான விசயமில்லை. கடல் பற்றியும் அதனுள் வாழும் உயிரினங்கள் பற்றியும் ஒரு தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டே இந்த “கடலுக்கு அடியில் ஒரு மர்மம்” சிறார் குறுநாவலை எழுதியிருக்க வேண்டும்.
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.