இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட ஹஜன் அன்புநாதன் இப்போது கொழும்பு பெருநகர வாழ்வியலை மெல்லத் தழுவி இயங்கி வருகின்றார். கலைத் தேடல் கொண்ட இவர் விளம்பரப்பட எழுத்தாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கவிதைகள் காதல், காமம், வேதனை, அன்பு மற்றும் தன்னிலை ஆகியவற்றைப் பேசுபொருளாகக் கொண்டவை. உணர்வுகளை அங்கதத்தொனியோடு நவீன கவிதை மொழிக்குள் அடக்கித் தருவது இவரது எழுத்தின் தனித்துவமாகும்.
Be the first to rate this book.