பொன் குமாரின் நமிதை உலகம் ஒரு தத்துவார்த்த பின்புலத்தை மழுதிச் செல்கிறது. ஒவ்வொரு கவிதையும் தத்துவார்த்தத்திற்கு தேவைப்படுகின்ற செங்கல், மணல், சிமெண்ட் கொண்டு கொந்து வேலை தெரிந்த ஏழை கவிஞனால் கட்டப்பட்டுள்ள ஒரு வீடாக முன் விரிந்து கிடக்கிறது. இதற்கு முன் தமிழ்க் கவிதையில் பலவிதமான தத்துவ றுகள் கவிதையாகி இருக்கின்றன.
முப்பதுகளின் தொடக்கத்தில் முளை விட்ட தமிழ்க் கவிதையின் போக்கு பல்வேறு விதமான கருத்தியல் குழிகளை சுமந்து கொண்டு கோலோச்சியது. ஆனால் பொன். குமார் வெளிப்படுத்தியிருக்கும் தந்துவார்த்த களம் என்பது அன்றாடம் தம் வாழ்வில் பயன்படுத்தும் எளிய மனிதர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் காட்சி ஓவியமாகும். நுண் அழகியல் சார்ந்த சமூக விமானத்தை பல கவிதைகளில் முன் வைப்பதை நாம் கவனிக்க முடியும்.
-கவிஞர் நட சிவகுமார்
Be the first to rate this book.