இந்த நாவலில் வரும் கதாநாயகி மஞ்சுவும் அவளுடைய வளர்ப்புத் தாயும் மற்ற கதாபாத்திரங்களும் கற்பனை என்றாலும், இதில் வரும் அநேகம் சம்பாஷணைகள் நான் நேரில் சந்தித்த மாந்தர்கள் பேசியவை. அவர்கள் பிரயோகித்த சொற்கள், வெளிப்படுத்திய கருத்துக்கள், கதை மாந்தர்கள் சொல்வதுபோல வருகின்றன. ‘சாமிக் குத்தம்னு (சிசுக் கொலை செய்வது) பயமில்லையா?' என்ற கேள்வியையும், ‘சாமியை யார் பார்த்தா?' என்ற கிழவியின் பதிலும், நான் கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும். நாவலை மீண்டும் படிக்கும்போது இன்றும் பசுமையாக அந்தப் பெண்களின் நினைவு எனக்கு வருகிறது. அவர்களது பிரச்னைகளுக்கு வேறுவிதமான தீர்வு இன்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
மூலைக்கு மூலை ஸ்கானிங் சென்டர்கள் முளைத்திருப்பதில், கருவிலேயே பெண் சிசுவை இனங்கண்டு கருக்கலைப்பு நடப்பது இப்போது பரவலாகிப் போய்விட்டது. பெண் கல்வியும், பொருளாதார முன்னேற்றமும் போதாது. பெண்ணைப் பற்றின சமூக மதிப்பீடுகள் மாறினாலேயே பெண்ணிற்கு மதிப்பு என்கிற ஆதங்கம் என்னை ஆட்கொள்கிறது. இன்றைக்கும் பெண் சிசுக் கொலைகளைப் பற்றின செய்திகள் வரும் நிலையில், இந்த நாவல் மீண்டும் புதிய ரூபத்தில் வெளி வருவது பொருத்தமானது என்றே தோன்றுகிறது.
Be the first to rate this book.