வரலாறு என்பது வற்றாது ஓடிக்கொண்டு இருக்கும் நதியைப் போன்றது. அந்த நதியில் இருந்து ஒரு கை நீரை அள்ளி உங்களுக்குக் கொடுக்கிறேன். காவூ இளவரசியோ, மகாராணியோ இல்லை. அவளின் கதையான இந்த சமூகப்படைப்பில் காந்தி, ராஜாஜி, காஞ்சி பெரியவர், மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையார், நடிகர் ஜெமினி சுணேசன், சேலம் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம், BSR என்று அழைக்கப்படும் தோழர் மன்னார்குடி சீனிவாசராவ், இந்திராகாந்தி, வகிதா ரஹ்மான், சோ, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா எனப் பல வரலாற்று நாயகர்களும் வருகிறார்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து, நெருக்கடி நிலை காலத்தில் முடியும் இந்த வரலாற்றுப் புனைவை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.
Be the first to rate this book.