R.P.ராஜநாயஹம் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறார். இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். எழுத்திலும் தனக்கென தனித்துவ மொழியில், நினைவுகளின் அழகியலைக் கொண்டு வருபவர்.
தத்துவார்த்தத்தையும், இலக்கியத்தையும் இவரிடமிருந்து பிரிக்கவே இயலாது. Profanity-ஐ நகைச்சுவையின் அழுத்தத்தைக் கூட்ட உபயோகிப்பது இவரது வழக்கம். 'காரணச் செறிவு' என்ற இந்த நூல் இவரது கலவையான எழுத்துகளின் சோற்றின் பதமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாமும் இருக்கின்றன இந்த நூலில், எல்லாவற்றிற்கும் மேல் ராஜநாயஹம் தெளிவாகத் தெரிகிறார்.
-சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.