அன்பு மணிவேலின் கவிதைகள் இயல்பாகத் தொடங்கி, சடாரெனப் பாய்ச்சல் காட்டி, பூரணத் துவம் அமைந்து நிறைவாவதை நாம் ரசித்துத் துய்க்கலாம். கவிதைகளில் அமைந்து பொலியும் இன்னொரு சிறப்பு. அவை காட்சிப் படலங்களாக விரியும் அற்புதம்தான். கவிதைகள் காட்சியாகும் தருணங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வாய்த்துக் கிடக்கின்றன.
-இரா. கோமதிசங்கர்
எழுத்தாளர்
அன்பு மணிவேலின் கவிதைகள் நவீன யுக்திகளால் கூர் தீட்டப்பட்ட புதுக்கவிதைகள். கோடை வெயிலில் வேப்ப மரத்தடியில் நிற்பதுபோல இதந்தரும் மென்காற்று. அன்பு மணிவேல் என்ற பெயருக்கேற்ப, இச்சமூகத்தின் மீதான அன்பையும் அக்கறையையும் ஒவ்வொரு கவிதையிலும் பிரதிபலிக்கிறார்.
-ஆர். நீலா
மாநிலத் துணைச் செயலாளர், தமுஎகச
Be the first to rate this book.