பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகள் ஒரு சிறிய பொறியில்தான் தொடங்கி இருக்கின்றன. அப்படி, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி அமைத்த ஒரு சிறிய பொறியின் கதை இது.
வாஸ்கோ ட காமாவை நாம் அறிவோம், காஞ்சீ மலாமை அறிவோமா?
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் கடல் வழியில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவனுக்குச் சரியான திசையைக் காட்டி ஒரு தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு, அவனை கோழிக்கோட்டில் கால்பதிக்க வைத்ததன் மூலம் இந்திய வரலாற்றுப் போக்கின் முக்கியப் பகுதியைத் தொடங்கி வைத்தவர்தான் காஞ்சீ மலாம்.
காஞ்சீ மலாம் எப்படி வாஸ்கோ ட காமாவைச் சந்தித்தார்?
எதனால் அவனுக்கு வழிகாட்டச் சம்மதித்தார்?இதன் மூலம் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா?பின்னர் மலாமின் மனநிலை எப்படி இருந்தது?
இதுவரை பதிவு செய்யப்படாத ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வைப் புனைவு கலந்து விறுவிறுப்பான நாவலாக்கி இருக்கிறார் அண்ணாமலை சுகுமாரன்.
Be the first to rate this book.