கனடாவின் வட மேற்குக் கோடியிலே அலாஸ்காவின் அருகில் யூக்கான் பிரதேசம் இருக்கிறது. அதிலே கிளாண்டைக் மாவட்டம் என்பது அலாஸ்காவின் எல்லையில் உள்ளது. அங்கே பாய்கின்ற பல ஓடைகளில் தங்கத் தூள் கிடைப்பதை 1896இல் அறிந்தார்கள். அதனால் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே விரைந்தோடினார்கள்.
இந்தப் பகுதியிலே தங்கத்தைத் தேடி வீணாக அலைந்தவர்களில் ஜாக் லண்டனும் ஒருவர். அதனால்தான் அவர் இக்கதையை மிகுந்த சுவையோடு எழுத முடிந்திருக்கிறது.
தங்கம் தேடிச் செல்பவர்கள் வண்டிகளில் செல்ல ஏராளமான நாய்கள் வேண்டியிருந்தன. அதனால் நாய் வாணிகம் ஓங்கிற்று. நாய்களைத் திருடிக் கொண்டுவந்து விற்பதும் பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாயிற்று. அந்த வழியிலே பனிப் பிரதேசத்திற்கு வந்ததுதான் இந்தக் கதையின் நாயகமாக விளங்கும் நாய்.
Be the first to rate this book.