சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
இந்தத்தொகுப்பில் சூழலியல், குறித்த கதைகள் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அறிவியல்பார்வையை உருவாக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் கதைகளைக் கொண்ட சிறந்த நூல்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.