தான் வாழ்ந்த காலத்தைத் தன் கவிதையில் பாடிய கவியாக, தமிழ் ஒளி திகழ்கிறார். இளவயதிலேயே பொதுவுடமை இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட அவர் ஒரு சர்வதேச மனிதனாகத் தன்னை உணர்ந்து இலக்கியத்தில் இயங்கியவர். உலகெங்கும் உழைக்கும் மக்கள் முன்னெடுத்த புரட்சிகரப் போராட்டங்களை இங்கிருந்து வரவேற்ற கவியாக அவர் இருந்தார். அத்தகைய அவரது பாடல்கள் சிலவற்றை முன் வைத்து அக்கால கட்டத்தின் வரலாற்றையும், எழுச்சியையும் பற்றிப் பேசுகிறார் எஸ். இராமச்சந்திரன். தமிழ்ஒளியின் பாடல்களைச் சாக்கிட்டு இந்த வரலாறுகளை இளம் வாசகர்களுக்குக் கடத்திவிடும் உத்தியாகத்தான் இந்த நூலை நாம் வாசிக்கிறோம்.
Be the first to rate this book.