காலச்சக்கரத்தை மாற்றியமைத்து திரும்ப கட்டமைத்தாலும் மீட்டெடுக்க முடியாத பொக்கிஷமாகவே புதைந்துகொள்கிறது கிராமத்து வாழ்க்கை. ஏதோ ஒருவடிவில் இறந்த உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் கதைவடிவ கவிதைகளைத் தீட்டியுள்ளேன்.
-ஜெயபால் பழனியாண்டி
.ஜெயபால் பழனியாண்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர்.
கவிஞர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
சிற்றேடு, உயிர் எழுத்து, நுட்பம் ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. மிதக்கும் வெளி, ஆதலால் சொல்கிறேன் இவருடைய கவிதைத் தொகுப்புகள். மினிமலிசம் என்னும் தன்னம்பிக்கை நூல் இவருடைய சமீபத்திய படைப்பாகும்.
Be the first to rate this book.