மரவட்டைகள் சிலருக்கு அருவருப்பை ஏற்படுத்தினாலும், எனக்கு வியப்பைத் தந்து புதுவெளியை அறிமுகப்படுத்தியது. இரயில் சக்கரங்கள் உருண்டு செல்வது போன்ற அதன் அழகிய எழில் நடை, கண்டங்கள் போன்ற நுட்பமான உடலமைப்பு, பெரிய உடலைச் சுமந்து கொண்டு செல்லும் அதன் அழகிய கால்கள் என யாவும் மனதை விட்டு அகல மறுக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் அழகை இரசிக்கும் அதே வேளையில் மரவட்டைகளின் வாழ்வியல் செயல்பாடுகளை அறிவியலடிப்பைடியில் அறிதல் அவசியம். இதில் அருவருப்போ, மூடத்தனங்களோ தேவையற்றது.
Be the first to rate this book.