காவியக் காதல் என்றாலே ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு, அம்பிகாவதி - அமராவதி, ஷாஜஹான் - மும்தாஜ் என்று காலம் காலமாகக் கேட்டுச் சலித்துப் போன கதைகளே நினைவில் அணிவகுக்கும். கண்ணீர், தியாகம், வலி, பிரிவு, ஆற்றாமை, தோல்வி எல்லாமே காதலில் உண்டுதான். ஆனால், அவை மட்டுமே காவியக் காதலின் அடையாளம் அல்ல.
எனில், வெல்வதுதான் காதலா? ஜெயித்த காதல் கதைகளில்கூட அதற்குப் பின் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்' என்று வணக்கம் போட்டுவிடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு காதல் எங்கே போனது? அது வாழ்வின் கடைசித்துளி வரை சுரக்கும் உன்னத உணர்வல்லவா!
இந்தப் புத்தகத்தில் உலவும் காதலர்கள் எல்லாம் அதையும் தாண்டி தனித்துவமானவர்கள். புவியில் பிறந்து, காதல் கொண்டு, சோதனை களை வென்று, போராடி நின்று, நன்று வாழ்ந்தவர்கள். வாழ்வின் இறுதிக் கணம் வரை காதலையும் விடாமல் சுவாசித்தவர்கள். இவர்களது காதலுக்குப் பின் அரசியல், நிறவெறி, துரோகம், வேதனை, வஞ்சம், வாட்டம், பிரிவு, ரணம், போராட்டம் எல்லாமும் இருக்கின்றன. அதைவிட அதிகமாக விடாப்பிடியான அன்பு இருக்கிறது. அந்த அன்புக்கு முன் அதிகார வர்க்கமே அடிபணிந் திருக்கிறது. தேசத்தின் தலையெழுத்தே மாறியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல, வரலாறும் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு காதலால் என்ன செய்ய முடியும் என்பதற்கு இந்த நூல் தரும் பதில், காதலால் எதுவும் செய்ய முடியும்!
அன்புரியவர்களுக்கு அளிக்க அர்த்தமுள்ள காதல் பரிசு.
Be the first to rate this book.