கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு என இலக்கியமே வாழ்க்கையாக இயங்கிய க.நா.சு. என்னும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் விவாதங்களைக் கிளப்பிய விமரிசகராகத்தான் மிகுதியும் பேசப்பட்டார். எதிர்மறுத்தோரும் அவர் என்ன சொல்கிறார் என்று எட்டிப்பார்க்கும்படி விவாதங்களின் மையப்புள்ளியாக இருந்தார்.
தமிழில் வந்து கொண்டிருந்த வெகுமக்கள் இதழ்களாகிய குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, தாய், சாவி, ஜூனியர் விகடன், இதயம் பேசுகிறது முதலியன பற்றி விலாவாரியாகச் சான்றுகாட்டி அலசும் வாய்ப்பு க.நா.சு.வுக்குக் கிடைத்தது. 01.07.1985 5 15.12.1985 ( 12 துக்ளக் இதழ்களில் 'பத்திரிகை விமர்சனம்' என்னும் தலைப்பில் தொடராக எழுதினார்.
அவர் பாணியிலேயே சொல்வதென்றால் 'பத்திரிகை விமர்சனம்' என்று இருந்தாலும் பெரும்பாலும் அபிப்பிராயங்கள்தாம். அதுதான் அவரது முறை. ஆனாலும் அவரது பரந்த வாசிப்பின் அடர்த்தியும் அடக்கமாக இழையோடும் எள்ளலும் வாசிப்புச் சுவையைக் கூட்டுகின்றன.
வெறும் விமரிசன அபிப்பிராயங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்த இதழ்களின் தர மேம்பாட்டுக்குச் செய்ய வேண்டியவற்றையும் வரிசைப்படுத்தியுள்ளார். இவை இன்றும் பயனுடையவை.
Be the first to rate this book.