தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள்.
அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வரவேற்றன.இடையறாத இந்த எழுத்துச் செயல்பாட்டின் மூலம் இலக்கிய உலகில் அவர் நிகழ்த்தி வந்த உரையாடலின் நீட்சியாக இந்த நேர்காணல்களைக் கருதலாம்.
பதினைந்தாண்டுத் தேடலின் விளைவான இத்தொகுப்பு, க.நா.சு.வின் அகத்தை மேலும் நெருங்கிப் பார்க்கச் செய்கிறது. க.நா.சு. என்கிற ஆளுமையின் பரிமாணங்களைத் துலங்கச் செய்யும் செய்திகள், அவரைப் பற்றிச் சொல்லப்பட்டுவரும் சில கட்டுக்கதைகளையும் முடித்து வைக்கின்றன.
இந்நூலின் செம்மையில் பதிப்பாசிரியர் துரை. லட்சுமிபதியின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் பரந்த உழைப்பையும் ஒருங்கே காணலாம்.
Be the first to rate this book.