கே .சச்சிதானந்தன்- கவிதைகள் -கட்டுரைகள் நேர்காணல்
தொ. ஆ. ஹவி
ஹவி, (1970) மதுரை, இயற்பெயர் ஹரிக்குமார். அப்பா - சுப்பிரமணியன், அம்மா - லட்சுமி, மனைவி இந்திராகாந்தி போதிபாலன் என்ற பெயரில் தொண்ணூறுகள் தொடங்கி, கவிதை, கதை, கட்டுரை எழுதி வருகிறார். இடறல். தொரட்டி, புதியதடம் ஆகிய இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தவர். புதிய காற்று மாத இதழ் மற்றும் மாலை முரசு, தினமலர், தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் முதுநிலை உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.இசைக்குமிழி' (2010) என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்புக்கு, 2011ஆம் ஆண்டின்.
நெய்தல் அமைப்பின் 'ராஜமார்த்தாண்டன் விருது வழங்கப்பட்டது. இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'முடிவற்ற கோடை' 2021இல் வெளிவந்துள்ளது. மாரி.மகேந்திரன் இயக்கத்தில் இவரது ஒளிப்பதிவில் வெளியான "அறையின் தனிமை" என்ற குறும்படம் கடந்த 2006இல் 'திருப்பூர் அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன்' விருது பெற்றது.
2023 இல் மலையாளக் கவி சச்சிதானந்தன் கவிதைகள் இவரது மொழியாக்கத்தில் வெளியானது. மேலும் இவரை பதிப்பாசிரியராகக் கொண்டு புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த கதைகள், லா.ச.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ஆகியன 2023இல் மிகுந்த கவனம் பெற்றன. இது, இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூலாகும்.
Be the first to rate this book.