நினைத்த மாத்திரத்தில் நம்முடைய பால்யத்தை மீட்ட முடியும் என்றால், வாழ்வு இவ்வளவு சலிப்புக்குள்ளாகாது. இன்றும் நம் எல்லாருக்கும் நமது பால்யத்தைக் குறித்துப் பசுமையான நினைவுகள் உண்டு. மனித வாழ்வு அபத்தங் களுக்கும் புனிதங்களுக்கும் நடுவே ஒரு அலைவரிசையை மீட்டுப் பார்க்கும் ஒரு யுத்தியாகப் பால்ய காலக் காதலைச் சொல்லலாம். 'ஜிந்தகி'யை வாசிப்பவர் யாருக்கும், தன் அனுபவத்தில் ஒரு 'மாநிறக் காதரை' மீட்டிப் பார்த்துக் கொள்ள முடியும்.
வட்டார மொழி, அங்கதம், அபத்தம், கீழ்மைகள். காதல் என்று மனித வாழ்வின் எல்லா உணர்ச்சிகளையும் முழு தரிசனமாக ஒரு படைப்பு வெளிக்கொணர்ந்துவிட்டது என்று கூறிவிடமுடியாது. ஆனால் ஒரு வாசகனுக்கு. அறிய வேண்டிய பாதையைப் படைப்பாளி காட்டிக் கொண்டேதான் இருப்பான். அவனது புத்தியில் ஊறிப் போன பார்வையை மாற்றும் படைப்பாளியின் முயற்சி என்றும் தோற்றுப்போகாது.
ஒரு படைப்பை வாசிப்பவர்கள் எப்படி வேண்டு மானாலும் நினைத்துக்கொள்ளட்டும். 'ஜிந்தகி' நம்மை வாட்டி வதைக்கும் என்றாலும், அதன் கீழ்மைகளையும் மேன்மைகளையும் தன்னில் ஏற்றிக்கொண்டு ஒரு படைப்பாளி நேர்த்தியான கலைநயத்துடன் ஒரு பண்டத்தைச் சமைத்துத் தருகிறான்.
Be the first to rate this book.