குழந்தைகளின் கற்பனைக்கு நம்முடைய நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத் தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும் பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம்.
குழந்தைகளின் கதைகளுக்குள் கருத்தைத் திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையி ல் யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.
அப்படித்தான் 'ஜில் ஜங் ஜக்' தொகுப்பிலுள்ள 22 கதைகளிலும் குழந்தைகலின் தங்களுடைய படைப்பூக்கத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் சுதந்திரமான அவர்களுடைய புனைவுத்திறனின் தெறிப்புகளாக மின்னுகின்றன.
-எழுத்தாளார் உதயசங்கர்
Be the first to rate this book.