ஜெயந்தனின் நாவல்கள் அனைத்துமே எளிய மனிதர்களின் வாழ்வை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக, அவை பெண்களை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழல்பவை.
பெண்களை மையப்படுத்திய படைப்புகள் என்பதால் அவர்களின் துயரங்களைப் பதிவு செய்வதோடு மட்டுமே நின்றுவிடாமல், அத்துயர்களி லிருந்து பெண்கள் விடுபடவேண்டிய அவசியத்தையும் விடுபடும் உபாயங் களையும் தனது பாத்திரங்கள் வாயிலாகவே அவர் முன்வைக்கிறார்.
ஜெயந்தனின் பாத்திரப் படைப்புகளும் விவரணைகளும் வசனங்களும் மிகக் கூர்மையானவை அடிப்படையில் பெரியார் மற்றும் கம்யூனிச இயக்கத்தின் கோட்பாடு களோடு வளர்ந்த அவரின் எழுத்துகளிலும் பெண் விடுதலை மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த சிந்தனைகள் ஆங்காங்கே நறுக்குத் தெறித்தாற்போல் வந்து விழுவதில் வியப்பேதும் இல்லை.
ஜெயந்தனின் படைப்புகள் அனைத்தும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும். புதுமைப்பித்தனின் படைப்புகள் அவர் காலத்தினும் கூடுதலாகத் தற்போது கவனம் பெற்றுள்ளதைப்போல், ஜெயந்தனின் படைப்புகளும் இனிவரும் காலங்களில் இலக்கிய உலகின் பேசுபொருளாக இருக்கும்.
Be the first to rate this book.