போராளி, சாகசக்காரர், தொழிற்சங்கவாதி, எழுத்தாளர், கலகக்காரர். ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு சோசலிசவாதி! காங்கிரஸ் கட்சிக்கு சோசலிச முகத்தைக் கொடுத்த நேரு, போஸ் ஆகியோர் வரிசையில் ஜேபி முக்கியமானவர். ஆனால் அதே காங்கிரஸுடன் முரண்பட்டபோது அதில் இருந்து வெளியேறவும் அவர் தயங்கவில்லை.
பதவி ஆசை இல்லாதவர், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத லட்சியவாதி, நேருவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் அறியப்பட்டவர் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஜேபி உண்மையில் சாதித்ததுதான் என்ன? ஜேபியின் வாழ்க்கை மற்றும் எழுத்துலகம் வழியாக அவரை இந்த தலைமுறையினருக்குச் சேர்ப்பிக்கும் பணியை நூலாசிரியர் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
Be the first to rate this book.