இந்திய நகரங்களின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த, குதிரையால் இழுக்கப்பட்ட, விரைவான போக்குவரத்திற்கான ஒரு சிறிய வாகனமே ஜட்கா வண்டி. மராத்தி மொழியில் ஜட்கா என்றால் விரைவாக என்று அர்த்தம். வாகன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத, வாகனங்கள் பெருகியில்லாத அல்லது பயன்பாட்டுக்கு வராத காலகட்டத்தில் மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு மிகவும் பயன்படுத்தப்பட்ட வாகனமாகவும் ஜட்கா வண்டியே இருந்தது. இந்தியச் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இதன் பயன்பாடு உச்சத்தில் இருந்தது. இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல கதைக்களமும் ஜட்கா வண்டியைச் சுற்றியே நிகழ்வதால் காலகட்டம் எதுவென யூகித்துக் கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அவர்களின் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்வுகள், அதில் நிகழும் காதல் போன்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே "ஜட்காவ்வண்டி" நூல்.
-ஜின்னா அஸ்மி
படைப்பு குழுமம்
Be the first to rate this book.