சமூக நீதி வரலாற்றில் ஒளி வீசும் நட்சத்திரமாகத் திகழ்பவர்களில் ஒருவர், கற்பூரி தாக்கூர். அவரைப்போல் தன் வாழ்வையும் செயல்பாடுகளையும் முழுக்க, முழுக்க சமூகத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் மிகக் குறைவு.
தீண்டாமை உச்சத்திலிருந்த காலத்தில், பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பிகாரைச் சேர்ந்த தாக்கூர் சோஷலிசத்தை ஓர் ஆயுதமாக முன்னிறுத்தி ஒரு மாபெரும் அரசியல், சமூகப் போராட்டத்தை முன்னெடுத்தார். சாதி ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் உரிமைகளையும் நலன்களையும் முதன்மைப்படுத்தி அவர் மேற்கொண்ட போராட்டம் அவரை ஒரு மகத்தான தலைவராக உயர்த்தியது.
ஜனநாயகன் என்று கொண்டாடப்பட்ட தாக்கூர் இருமுறை பிகாரின் முதல்வராகப் பதவியேற்றியதோடு அரசியல் களத்திலும் சமூகக் களத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினார். எளிமையான, தூய்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்த அதே நேரம், தீரமிமக்க ஒரு சமத்துவப் போராளியாகவும் அவரால் இருக்கமுடிந்து.
கற்பூரி தாக்கூர் யாருக்குச் சொந்தமானவர் எனும் கேள்வி அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு போட்டியாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவர் மக்களுக்குச் சொந்தமானவர் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்நூல். சாதி, மதம், வர்க்கம் உள்ளிட்ட பாகுபாடுகள் கூர்மையடையும் ஒவ்வொருமுறையும் நாம் எதிர்த்துப் போராடுவதற்கான உத்வேகத்தை கற்பூரி தாக்கூர் அளிக்கிறார்.
Be the first to rate this book.